தென்காசியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது
தென்காசி: தென்காசி பகுதியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஐந்து பேரை போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதனையோட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என அதிரடி படையினர், போலீசார் மற்றும் உளவுபிரிவினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி, புளியரை, கடையநல்லூர், வடகரை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் கள்ள துப்பாக்கிகளின் புழக்கம் இருப்பதாக உளவுதுறையினர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் டிஐஜி கண்ணப்பன், நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் உத்தரவின் பேரில் தென்காசி டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையில் தனிப்படையினர் தென்காசி, புளியரை, குற்றாலம், வடகரை உள்பட பல பகுதிகளில் கள்ள துப்பாக்கி சம்பந்தமாக தேடுதல் வேட்டை துவங்கினர்.
அப்போது போலீசார் சந்தேகத்திடமாக சுற்றி கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கள்ள துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களுக்கு கள்ள துப்பாக்கிகளை சப்ளை செய்தது யார்... வேறு யார் யாருக்கு கள்ள துப்பாக்கி சப்ளை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் நக்சல்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா...என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கள்ள துப்பாக்கிகள் பிடிபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications