உடனடி போர் நிறுத்தம்-அத்வானி வேண்டுகோள்
டெல்லி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்தின் வெறிச்செயலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகிறார்கள். இது குறித்து நேற்று அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதே சமயம் தமிழர்களுக்கு சம உரிமையும் மரியாதையும் வழங்கப்பட்டு, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரு கொள்கைகளை பின்பற்றி தான் இலங்கையில் அமைதி காண முடியும்.
மத்திய அரசின் தெளிவற்ற வெளியுறவு கொள்கையால் தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் அமைதியை நிலைநாட்டும் சக்தியாக இருந்த இந்தியாவின் பங்கை காங்கிரஸ் அரசு வெறும் பார்வையாளர் என்ற அளவுக்கு குறைத்து விட்டது. போரை நிறுத்துமாறு இலங்கை அரசை நெருக்க மத்திய அரசு தவறிவிட்டது.
கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது...
காங்கிரஸ் அரசு விடுதலை புலிகளையும், தமிழர்களையும் பிரித்து பார்க்க தவறிவிட்டது. இப்பிரச்சினையில் மத்திய அரசு கண்களை மூடி கொண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு உதவி வருகிறது என்றார் அத்வானி.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications