வேட்பு மனு..தமிழகத்தில் நாளையே கடைசி நாள்
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் வேட்பு மனு செய்ய நாளையே கடைசி தினமாகும்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தவிர, அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாளாகப் பார்த்து கடந்த 20ம் தேதி மொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பல திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 468 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகளே.
சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் இதுவரை 60 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வட சென்னை தொகுதியில் 14 பேரும், மத்திய சென்னையில் 19 பேரும், தென் சென்னையில் 27 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு தாக்கலுக்கு நாளையே கடைசி நாளாகும். நாளை மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடையும். எனவே, நாளை ஏராளமானோர் மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடு்த்துக் கொள்ளப்படும். மனுக்களைத் திரும்ப பெற 27ம் தேதி கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
பொன்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்..
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோர் நாகர்கோவிலில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications