அப்பாவிகள் நலனுக்காக புலிகள் சரணடைய வேண்டும்-ஐ.நா. பாதுகாப்பு சபை

பிரான்ஸ் நாட்டின் கோரிக்கைப்படி இலங்கை இனப்படுகொலை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, மனிதாபிமான பேரவலம், அங்கு நடந்து வரும் இனப்படுகொலை, என்ன மாதிரியான நடவடிக்கைகள் இப்போது தேவை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவரும், மெக்சிகோ நாட்டுத் தூதருமான கிளாட் ஹெல்லர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். தீவிரவாதத்தை விட வேண்டும். அமைதி முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும். ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.நா. ஆதரவுடன் மதிப்பீடுகளை மேற்கொள்ள இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும், ஒத்துழைக்க வேண்டும்.
வன்னிப் பகுதியில், தற்போது மிகப் பெரிய அளவிலான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளு. அப்பாவிகள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
அங்கு சிக்கியிருக்கும் அப்பாவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகள் தாரளமாக செய்ய முன்வர வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications