அழகிரி, திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்தனர்.
மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி, திமுகவினருடன் ஊர்வலமாக தேர்தல் அதிகாரியின் அலுவலகமான மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஆட்சித் தலைவர் சீத்தாராமனிடம் அவர் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
இதேபோல, வட சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல பிற திமுக வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இன்னொரு முக்கிய கட்சியான அதிமுகவின் வேட்பாளர்கள் 20ம் தேதியே மனு தாக்கல் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாநிதி மாறன் மனு தாக்கல்..
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ஜோதி நிர்மலாவிடம் மனு தாக்கல் செய்தார்.
தென் சென்னை வேட்பாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூரில் போட்டியிடும் நடிகர் நெப்போலியன், மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலைக்கண்ணனிடம் மனு தாக்கல் செய்தார்.
கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் அழகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார்.
விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சாமித்துரை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் நாகர்கோவிலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பணம் கொடுத்த திமுகவினர்-பிடித்து வைத்த மக்கள்:
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடம் சிவகங்கை தொகுதியில் அவருக்கு ஓட்டளிக்கக் கோரி சாலை கிராமத்தில் பணம் கொடுக்க வந்த திமுகவினரை மக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications