தமிழர்களைக் காக்க சீக்கிய அமைப்பு கோரிக்கை
அமிர்தசரஸ்: இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீக்கிய அமைப்பான தள் கல்சா கோரிக்கை விடுத்துள்ளது.
சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கையான காலிஸ்தான் கோரிக்கைக்கு முன்பு ஆதரவு தெரிவித்த அமைப்பு தள் கல்சா. அமிர்தசரஸிலிருந்து அது செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு தற்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தள் கல்சா அமைப்பின் அரசியல் விவகாரப் பிரிவு செயலாளர் கன்வர்பால் சிங் இதுகுறித்து கூறுகையில், ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் சர்வதேச சமுதாயம் ஈடுபடவில்லை. இதனால் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகிறது.
இது ஐ.நா.வின் கோட்பாடுகளையும், மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களையும் மீறும் செயல். இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது இப்பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கொண்டுவருவதற்கு பாதகமாக அமையும் என கூறியுள்ளார்.
மேலும், ஐ.நா. சபை உடனடியாக அப்பாவித் தமிழர்களைக் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ராஜபக்சேவுக்கு பிட்டா பாராட்டு..
இதற்கிடையே, தீவிரவாதிகளுக்கு எதிராக ராஜபக்சே அரசு சிறப்பாக செயல்படுகிறது. எனவே ராஜபக்சேவை நான் பாராட்டுகிறேன். நேரில் போயும் அவரைப் பாராட்டி, விருது கொடுத்துக் கெளரவிக்கப் போகிறேன் என்று எம்.எஸ்.பிட்டா கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் தனது கால்களை இழந்தவர் பிட்டா. பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர். இவரைக் கொல்ல பலமுறை சதிகள் நடந்துள்ளன. அவற்றிலிருந்து தப்பி வருபவர் பிட்டா. முன்பு காங்கிரஸில் இருந்தார். தன்னைக் கொல்ல நடந்த சதிச் செயல்களின் விளைவாக அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்.
இவர் இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தீவிரவாதிகளை ஒழிக்க ராஜபக்சே அரசும், இலங்கை ராணுவமும் சிறப்பாக செயல்படுகின்றன.
உலகிலேயே சிறந்த ராணுவமாக இலங்கை ராணுவம் மாறியுள்ளது. ராஜபக்சே அரசையும், அந்நாட்டு ராணுவத்தையும் நான் பாராட்டுகிறேன். நேரில் போயும் அவரைப் பாராட்டி, விருது கொடுக்கப் போகிறேன் என்கிறார் பிட்டா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications