செய்தித்தாள்கள் படிக்க கஸாபுக்கு தடை-நீதிமன்றம் உத்தரவு
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி கஸாப் செய்திதாள்கள் படிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. வேண்டுமானால் புத்தகங்களை படித்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தற்போது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கஸாப்
வழக்கு நடைபெற்றுகிறது.
இந்நிலையில் கஸாப் தான் செய்திதாள்களை படிக்க விரும்புவதாக தனது வக்கீல் அப்பாஸ் கஷ்மி மூலம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான். இதை விசாரித்த நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
இது குறித்து அவனது வக்கீல் கஷ்மி கூறுகையில்,
கஸாப் சிறையில் செய்திதாள்களை படிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கு பதிலாக கஸாபுக்கு புத்தங்கள் படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கஸாபுக்கு உருது நன்றாக தெரியும் என்பதால் அவருக்கு உருது புத்தகங்களை வாங்கி கொடுக்க இருக்கிறேன். இந்த புத்தகங்கள் சிறை அதிகாரி மூலமாக கஸாபை சென்றடையும். கஸாப் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த புத்தகங்களை அதிகம் படிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
வழக்கு குறித்து அவருடன் பேசுவதற்கு எனக்கு குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த வழக்கில் வாதாட முழுமையாக இன்னும் தயாராகவில்லை. எனது பணியில் அதிக நேரம் இந்த வழக்கிற்கு தான் உழைத்து வருகிறேன் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications