இன்னும் 2 நாளில் நல்ல முடிவை சொல்லும் இலங்கை - ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த் பேட்டியில்,

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் குறை கூறுகின்றனர். இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனைவருக்குமே தெரியும், இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களை பாதுகாப்பதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இதை வைத்து சில கட்சிகள் அரசியல் ஆதாயம் அடைய நினைத்தால் அது நடக்காது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள், திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு விதமாக இந்த பிரச்சினையை அணுகுகிறது

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. இன்னும் 24 அல்லது 48 மணி நேரத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

பிரபாகரனுக்கு கெட்ட நிலைமை வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்ன செய்துகொள்வார் என்று எனக்கு தெரியாது.

மேலும் இலங்கை ஒரு தனி நாடு, எனவே நாம் அதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் 48 மணி நேரத்தில் நல்லவை நடக்கும் என்று நம்புவோம். அங்கு ஏற்படும் நிகழ்வுகளால் தமிழகத்திற்கு அகதிகள் அதிக அளவில் வரவில்லை. அவர்கள் அந்த நாட்டிலேயே உள்நாட்டு அகதிகளாக உள்ளனர்.

குண்டு வீசும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து கொடுக்கும்.

பிரபாகரனுக்கு இந்தியா அடைக்கலம் தருவது குறித்து நான் கருத்து கூறமுடியாது. ஏன் என்றால் இங்கு சட்டங்கள் உள்ளது. மேலும் இலங்கை பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு கருத்து வேறுபாடு கிடையாது என்றார் சிதம்பரம்.

வழக்கும் இல்லை, இழுக்கும் இல்லை..

முன்னதாக ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், என்மீது இதுவரை யாரும் வழக்கு போட்டது கிடையாது. இனி வழக்கு வரப்போவதும் இல்லை, உங்களுக்கு இழுக்கு வரப்போவதும் இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தல் வந்துள்ளது. தேர்தலை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. ஆட்சியில் இருந்த போது என்ன செய்தோம். இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம்.

நான்கு இடத்தில் போட்டியிடும் கட்சிகள் கூட நாங்கள் தான் பிரதமர் என்று கூறுகின்றனர். இது கலிகாலம். என்ன செய்வது? சகித்து கொள்ளத்தான் வேண்டும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடும் கட்சி காங்கிரஸ் கட்சிதான். இந்த கட்சிக்கு மட்டும்தான் ஆட்சி அமைக்கும் தகுதி உள்ளது.

நான் மத்தியில் 4 ஆண்டு 7 மாதம் நிதி மந்திரியாக இருந்தேன். 9 லட்சம் கோடிக்கு வரவு - செலவு செய்து இருக்கிறேன். அதில் ஒரு செப்புக்காசு கூட தவறு நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூட குற்றம் சாட்டியது கிடையாது.

என்மீது நம்பிக்கை வைத்து என்னை இந்த நாட்டை பாதுகாக்கும் உள்துறையின் அமைச்சராக சோனியா நியமித்தார். அந்த பணியையும் உங்கள் ஆதரவுடன் திறம்பட செய்துள்ளேன்.

தீவிரவாதிகளுக்கு சம்மட்டி அடி..

இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்த முயன்றால் அதை முளையிலேயே கிள்ளி எறியும் சக்தி நமக்கு உள்ளது. அதையும் மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி சம்மட்டி அடியாக இருக்கும். என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், இந்த நாட்டிற்கும் பாதிப்பு வராமல் பாதுகாப்பேன்.

இந்த தேர்தலில் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என தெரியுமா? வேட்பாளர்கள் ஒழுக்கமாக, தூய்மையாக, பரிசுத்தமாக இருக்கவேண்டும், ஊழல் அற்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பு தருவதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். சிவகங்கை தொகுதியில் எனக்கும், கண்ணப்பனுக்கு மட்டும்தான் போட்டி. இதுவரை என்மீது வழக்கு போட்டது கிடையாது. இனி வழக்கு வரப்போவதும் இல்லை, உங்களுக்கு இழுக்கு வரப்போவதும் இல்லை என்ரார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+