ஈழத்திற்கு இலங்கையில் இடமில்லை-கோதபாய நக்கல்
கொழும்பு: ஈழம் அமைக்க இலங்கையில் இடம் இல்லை. வேண்டுமானால், வேறு இடம் பார்த்து அமைத்துக் கொள்ளுங்கள் என்று அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோதபாய ராஜபக்சே கொழுப்புத்தனமாக பதிலளித்துள்ளார்.
தனி ஈழம் கண்டிப்பாக அமையும், அதை அதிமுக அமைத்துத் தரும் என்று ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுநாள் நாள் வரை ஈழத்தை எதிர்த்து வந்த ஜெயலலிதா இப்படி அதிரடியாக அறிவித்திருப்பது இலங்கைக்கு அதிர்ச்சியும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோதபாய ராஜபக்சே கூறுகையில், இவர்கள் எல்லாம் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. இலங்கையில் ஈழம் அமைக்க இடம் இல்லை. வேண்டுமானால் ஜெயலலிதா வேறு இடம் பார்த்து அங்கு அமைத்துக் கொடுக்கட்டும்.
ரவிசங்கர் காட்டிய வீடியோவைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இடம் பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் ஹிட்லர் காலத்து சித்திரவதைக் கூடங்கள் போல இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். உண்மையில், ரவிசங்கர் இந்த முகாம்களைப் பார்த்து விட்டு அதிபரை சந்தித்தபோது, உலகிலேயே நான் பார்த்த முகாம்களிலேயே சிறந்த முகாம்கள் இவைதான் என்று கூறினார்.
இப்படி இருக்க முடிந்து போன தீவிரவாதிகள் கதைக்கு உயிர் கொடுக்க சிலர் முயல்வது ஏன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கோதபாய.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications