அதிகாலையில் ராணுவம் கடும் தாக்குதல்: நூற்றுக்கணக்கில் பலி
கொழும்பு: தாற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவிக்கும் முன் இன்று அதிகாலை முதல் பல முனைகளிலிருந்தும் இலங்கையின் முப்படைகளும் கடும் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலியானதாக அஞ்சப்படுகிறது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இன்று அதிகாலை முதல் கடும் தாக்குதலில் குதித்தன. விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இந்த தாக்குதல் நடந்தது. இது மிகச் சிறிய கடலோரக் கிராமம் ஆகும். இங்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிக்கியுளளனர்.
இப்பகுதியின் வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதியிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு தாக்குதல் தொடங்கியது.
இது பாதுகாப்பு வளையப் பகுதியாக இலங்கையால் அறிவிக்கப்பட்ட கிராமம் ஆகும். ஆனால் இன்று காலை முதல் இங்கு நடந்து வரும் கடும் தாக்குதலைப் பார்க்கும்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications