அட்சய திருதியை விற்பனை 40% சரிவு!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் அதிகமாக தங்கம் சேரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆண்டுதோறும் இந்த நாளுக்கு மவுசு கூடி வருகிறது. நகைக் கடைக்காரர்களும் பல கோடி ரூபாய் செலவழித்து மக்களின் இந்த நம்பிக்கையை முடிந்தவரை ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர்.
நெருக்கியடித்த கூட்டம்...
நேற்று அட்சய திருதியை நாள் என்பதால் புரசைவாக்கம், தி.நகர், பாரிமுனை, அண்ணாநகர் போன்ற இடங்களிலுள்ள நகைக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, தாம்பரம் போன்ற பகுதிகளிலும் இப்போது பிரபல நகைக் கடைகள் கிளை பரப்பியுள்ளன. இங்கும் அதே நிலைதான்.
கோவை, திருப்பூர் மற்றும் மதுரை நகர நகைக் கடைகளிலும் சென்னைக்கு இணையான நெரிசலைக் காணமுடிந்தது.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1000 கிலோ தங்கம் விற்பனையானது.
விற்பனை சரிவு...
ஆனால் விற்பனையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 முதல் 40 சதவிகிதம் வரை குறைவாகவே இருந்ததாக மும்பை தங்க மார்க்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதனை சர்வதேச கோல்டு கவுன்சிலும் ஒப்புக் கொண்டுள்ளது.
குறிப்பாக கோவை நகரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகித விற்பனை சரிவு இருந்ததாக தெரிய வந்துள்ளது.
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததும், மக்களின் வருமானம் எதிர்பாராத வகையில் வீழ்ச்சி அடைந்ததும் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனையை பாதித்துள்ளதாக உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஜிதேந்திரா கூறுகிறார்.
கடந்த இரு வாரங்களாக இறங்குமுகத்திலிருந்த தங்கம் விலை அட்சய திருதியை முன்னிட்டு நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.1381-க்கு விற்பனையானது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications