'இலங்கை': பொதுக் கூட்டத்தில் அழுத வைகோ!

மதுரை அவனியாபுரம் பஸ் நிலையத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் நாடுகளில் வாங்கப்பட்ட குண்டுகள் இலங்கையில் தமிழன் தலையில் விழுகிறது.
காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 5,600 குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியுள்ளது. இதில் கொத்து குண்டுகள் இந்தியா வழங்கியது. ஆயுதம் மட்டுமல்ல, ஆட்களையும் அனுப்பியுள்ளது இந்தியா.
அங்குள்ள ரேடார்களை சரிசெய்த இந்தியர்கள் சிந்தாமணி, ஏ.கே.தாகூர் காயமடைந்துள்ளனர். டீசல் சென்றால் ராஜதுரோகம் என்றால், இலங்கைக்கு ஆயுதம் சென்றது மட்டும் என்ன நியாயம்?.
இலங்கைப் போருக்கு காரணம் மத்திய அரசு, காங்., மற்றும் சோனியா என குற்றம் சாட்டுகிறேன். மகாபாரதத்தில் அபிமன்யுவை சுற்றி எல்லோரும் தாக்குவார்கள், அது போல இலங்கை தமிழர்களை சுற்றி தாக்குகிறார்கள்.
இலங்கை பிரச்னை பற்றி துண்டு பிரசுரம் கொடுத்த மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சி.டிக்களாக இவை உங்கள் வீட்டுக்கு வீடு வரும் என்று கூறியபோது வைகோ அழுதுவிட்டார்.












Click it and Unblock the Notifications