திமுக கூறுவது போல எனக்கு சொத்து இருந்தால் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் - தா.பா
நெல்லை: எனக்கு சொத்து இருப்பதாகவும், அதை நான் மறைத்து விட்டதாகவும் திமுக கூறுகிறது. அப்படி எனக்கு ஏதாவது சொத்து இருந்தால் அதை அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
நெல்லையில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாவூர்சத்திரம், செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை ஆகிய இடங்களில் தா.பாண்டியன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், கருணாநிதியும், தி.மு.க.வினரும் எனக்கு சொத்து இருப்பதாக கூறி வருகிறார்கள். அதை நிரூபித்தால் அதை நான் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன்.
மே 13-ம் தேதிக்கு பிறகு மத்தியில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடுமோ? அப்படி ஏற்பட்டால் நாம் எங்கே செல்வது? என்ற கவலையில் கருணாநிதி உள்ளார்.
இந்த ஆட்சி மீது மக்களுக்கு திருப்தி இல்லை. ஒரு பக்கம் ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு தரமற்ற அரிசி வழங்குகின்றனர். ஆனால் தரமான அரிசி கடைகளில் கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் நமது கூட்டணி வெற்றி பெறும். இதுவரை தோள்கொடுத்து வந்தோம். அதற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மக்களுக்கு துயரம் மட்டுமே கிடைத்தது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் கொளத்தூர்மணி, சீமான், நாஞ்சில்சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அடைத்தனர். இப்போது என்ன ஆயிற்று என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications