சென்னையில் அதிமுக பேச்சாளர் மீது திமுக தொண்டர் செருப்பு வீச்சு
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பேசி கொண்டிருந்த அதிமுக பேச்சாளர் மீது திமுக தொண்டர் ஒருவர் செருப்பை வீசியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 10 தொகுதிகளில் நேரடியாக மோதுகி்ன்றன. அதில் மத்திய சென்னை தொகுதியும் ஒன்று. இங்கு திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், அதிமுக சார்பில் முகமது அலி ஜின்னாவும் நிறுத்தப்பட்டு்ள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அதிமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சிங்கை அம்புஜம் என்பவர் முகமது அலி ஜின்னாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் திமுக கட்சியையும், அதன் தலைவர்களையும் ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த பேச்சால் சாலையோரம் சென்று கொண்டிருந்த திமுக தொண்டர் விஜய ஜம்பு என்பவருக்கு கோபம் ஆனது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிமுக பேச்சாளரை நோக்கி வீசினார். அந்த செருப்பு பேச்சாளர் மீது விழுந்தது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த திமுக தொண்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications