என்டிடிவியில் 20% ஊழியர்கள் பணி நீக்கம்!

மேலும் பணியிருப்பவர்களுக்கு சம்பளக் குறைப்பு, சலுகைகள் ரத்து என பல்வேறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்த நிர்வாகச் செலவு மற்றும் ரூ. 731.8 மில்லியன் அளவுக்கு அதிகரித்துவிட்ட நஷ்டம் போன்றவைதான் இந்த திடீர் நடவடிக்கைகளுக்குக் காரணம் என நி்ர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் 55 ஊழியர்களை கடந்த ஏப்ரல் 26ம் தேதியே பணியிலிருந்து விலகுமாறு கடிதம் கொடுத்துள்ளது என்டிடிவி.
இவர்கள் தவிர மேலும் 20 சதவீத ஊழியர்கள் இன்றுமுதல் நீக்கப்படுகிறார்கள்.
இப்போது பணியில் உள்ள அனைவருக்குமே பேதமின்றி சம்பளக் குறைப்பு, சலுகைகள் ரத்து மற்றும் கூடுதல் நேரப் பணிக்கான ஊதிய நிறுத்தம் போன்றவற்றை அறிவித்துள்ளது என்டிடிவி. ஊழியர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
இன்று வெளியான என்டிடிவியின் நான்காவது காலாண்டு முடிவுகளின்படி, நிறுவனத்தின் நிர்வாகச் செலவு ரூ.953 மில்லியனிலிருந்து ரூ. 1.34 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் வருமானம் ரூ. 3056 மில்லியனிலிருந்து ரூ. 3096.1 மில்லியன் அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
இதன்படி இந்தாண்டுக்கான நஷ்டம் ரூ.731 மில்லியனாகவும், இந்த காலாண்டின் நஷ்டம் மட்டும் ரூ.447.4 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் என்டிடிவி ரூ.428 மில்லியன் லாபம் கண்டது.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டே இந்த லே ஆஃப் மற்றும் செலவுக் குறைப்புகளை செய்துள்ளது என்டிடிவி. பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று இந்த அளவு பணியாளர்களை நீக்கிருப்பது இதுவே முதல்முறை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications