960 கைதிகளுக்கு வாக்குரிமை:தபாலில் ஓட்டு போடலாம்-டிஜிபி
நெல்லை: தமிழகத்தில் மத்திய சிறையில் இருக்கும் 960 கைதிகளுக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி நடராஜ் தெரிவித்துள்ளார்.
சிறைத்துறை டிஜிபி நடராஜ் நேற்று பாளை மத்திய சிறையில் கைதிகளுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் கிளை சிறைகளில் கைதிகளுக்கு நூற்றுக்கு நூறு திட்டத்தி்ல் கல்வி போதிக்கப்படுகிறது.
சிறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் மட்டும் ஈடுபட்டால் போதாது. கைதிகளுக்கு கல்வி, ஒழுக்கத்தை கற்று கொடுப்பதிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இனிமேல் கைதிகள் மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை குடும்பத்தினரை சந்திக்கலாம். ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளும் கைதிகள் தனி அறையி்ல் குடும்பத்தினருடன் சந்தித்து பேசலாம்.
தமிழகத்தில் மத்திய சிறைகளில் இருக்கும் 960 கைதிகளுக்கு வாக்குரி்மை உள்ளது. இவர்களில் 166 பேருக்கு வாக்கு சீட்டு வந்துள்ளது. இவர்கள் தபால் மூலம் வாக்களிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications