தேர்தலில் யாருக்கு ஆதரவு?-வணிகர் சங்க பேரவை 5ம் தேதி முடிவு
ஆம்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து நாளை நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் முடிவு நாளை மறுநாள் 5ம் தேதி அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5ம் தேதி வேலூரில் 26வது ஆண்டு மாநாடு நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்முறை எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அரசியல் கட்சியினர் மீது வணிகர்கள் வெறுப்பில் உள்ளோம். இதற்கு முன்பு நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், ஆளும் கட்சி ஆன பிறகு வணிகர்களின் கோரிக்கைகளை மறந்து விடுகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு துணை போகின்றனர்.
இப்போதைய அரசியல் கட்சி தலைவர்களுக்கு மக்கள் நலனை பற்றி அக்கறை இல்லை. ஆனால் தொண்டர்கள் அளவற்ற மதிப்பு வைத்துள்ளனர். தலைவர்கள் மனமாற்றம் அடைய வேண்டும். மக்கள் பாதிக்கப்படுகிற பிரச்சினைகளில் நேர்மையாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டும். அரசியலுக்கு எதிராக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இறங்குவது தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் ஆகும். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வரவேண்டும்.
பொருட்களின் விற்பனை விலையை அச்சடிப்பது போன்று, அதிகபட்ச தயாரிப்பு செலவை அச்சடிக்க வேண்டும். பொருட்களின் மூலப்பொருட்கள் பற்றிய பட்டியலை தமிழில் அச்சடிக்க வேண்டும்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு 22 கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். அதனை ஏற்கும் அரசியல் கட்சியை பற்றி இன்று சென்னையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் ஆராயப்படும். அதன்படி வேலூரில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடக்கும் மாநாட்டில் வணிகர்கள் யாருக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள் என்பதை அறிவிப்போம் என்றார் வெள்ளையன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications