செப்டம்பருக்குள் எல்லாம் சரியாகிவிடும்! - அறிஞர்கள் கருத்து
டெல்லி: செப்டம்பருக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்பும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மீட்சி ஐடி துறைக்குப் பொருந்தாது என்றும், மற்ற துறைகளை விட ஐடி துறை மட்டும் சரியான பாதைக்குத் திரும்ப நீண்ட காலம் பிடிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீட்சியின் முதல் கட்டமாக வரும் காலாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம் வரை உயரக்கூடும் என்றும், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வளர்ச்சி ஆரம்பமாகிவிடும் என்றும் நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
எப்ஐசிசியின் பொதுச் செயலாளர் அமித் மித்ரா கூறுகையில், கோடைக்குப் பிறகு அனைத்துத் துறை நடவடிக்கைகளிலுமே பெரிய மாறுதலை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமரின் பொருளாதாரச் செயலாளர் சுரேஷ் டெண்டுல்கரோ இன்னும ஒருபடி மேலே போய், பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் ஏற்கெனவே துவங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
கேபிஎம்ஜியின் அர்விந்த் மகாஜன் கூறுகையில், நிச்சயம் பொருளாதார வளர்ச்சி வழக்கமான பாதைக்குத் திரும்பிவிடும். 6 முதல் 7 சதவிகித வளர்ச்சியை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம் என்றார்.
ஏற்கெனவே எஃகு மற்றும் இரும்புத் துறையிலும், சிமெண்ட் உற்பத்தியிலும் நல்ல வளர்ச்சி தெரிவதாகவும், இந்த ஆண்டு விவசாயம் கைகொடுத்தால் நிச்சயம் பொருளாதார வளர்ச்சி நினைத்ததை விட சிறப்பாக அமையும் என்றும் கூறினார் மகாஜன்.
எல்லாம் எதிர்பார்ப்பது போல நடந்தால் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் தெரியும் என்றும் அவர் கூறினார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications