ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கைதான 3 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள், புதுக்கோட்டை சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், 13 மாணவர்கள் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி மார்க்கெட் பகுதியில் சமீபத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு முக்கிய காரணமான ப.சிதம்பரத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறி அவர்கள் பிரசாரம் செய்தனர். துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காங்கிரஸார் மாணவர்களை கல்வீசித் தாக்கினர். இதனால் அங்கு பெரும் மோதல் மூண்டது.
விரைந்து வந்த போலீஸார் 13 மாணவர்களையும் அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 13 பேரில், ஆசிப், முத்து கிருஷ்ணன், செந்தில் ஆகிய மூன்று மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதாக முத்துக்குமார் எழுச்சி இயக்கத்தின் சார்பில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications