தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரும் மன்மோகன் சிங்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரசாரம் செய்ய வருவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார்.
தீவுத் திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட சுதர்சனம் அங்கு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரசாரம் செய்ய வருகிறார். எந்த ஊரில், எப்போது பிரசாரம் செய்வார் என்பது பின்னர் விரிவாகத் தெரிவிக்கப்படும் என்றார்.
ஆனால் ராகுல் காந்தி பிரசாரம் செய்வாரா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார் சுதர்சனம்.
தமிழக லோக்சபாத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உள்ளூர் தலைவர்களே தற்போது பிரசாரம் செய்து வருகின்றனர். அகில இந்திய அளவில் பெரிய தலைவர்கள் யாரும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவும், பிரதமரும் மட்டுமே பிரசாரம் செய்வார்கள் என்று தெரிகிறது. அதேசமயம், ராகுல் காந்தி வரும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸ் மீது பெரும் அதிருப்தி நிலவுவதால் சோனியா, மன்மோகன் சிங்குடன் நிறுத்திக் கொள்ள காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications