நேபாள எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு
சில்குரி: நேபாளத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருவதாலும், அங்கிருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துவிடலாம் என்ற காரணத்தினாலும் நேபாள எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் பிரதமராக இருந்த பிரசந்தா, ராணுவ தளபதி ரூக்மங்கத் கத்வாலை பணி நீக்கம் செய்தார். ஆனால், கத்வால் விலக மறுத்துவிட்டதாகவும் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் பேசி ராணுவ புரட்சி ஏற்படுத்து போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் அதிபர் ராம்பரன் யாதவ் அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் கத்வாலை தளபதியாக நியமித்தார். இதையடுத்து பிரசந்தா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்திய அரசு நேபாள அதிபருக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதே குற்றச்சாட்டை நேபாளத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை இந்தியா மறுத்துவிட்டது. தாங்கள் நேபாள விவகாரத்தில் தலையிடவில்லை என உறுதியாக கூறிவிட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் டாரிஜலிங் மாவட்ட எல்லைக்கு அருகில் நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே உள்ள 1752 கிமீ., தூர எல்லையை கண்காணித்து வரும் இந்தியாவின் சஸ்கஷ்த்ரா சீமா பால் பாதுகாப்பு படைக்கு முழு எச்சரிக்கையுடன் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அந்த படையின் 22வது பட்டாலியன் தலைவர் எஸ்.ஐ.சர்கார் கூறுகையில், எல்லை புறத்தில் அனைத்து சோதனைசாவடிகளும் உஷார் நிலையில் இருக்கின்றன. ரோந்து மற்றும் சோதனைகளை அதிகரித்துள்ளோம் என்றார்.
சஸ்கஷ்த்ரா சீமா பால் படையின் தலைவர் எம்.வி. கிருஷ்ணா ராவ் கூறுகையில், பாதுகாப்புக்காக 44 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நேபாள எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். தற்போது அதை மேலும் அதிகரித்துள்ளோம் என்றார்.
இந்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நேபாள எல்லை பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்தியாவுக்குள் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நுழையவிடாமல் தடுப்போம் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications