கட்சிகள் மீதான கோபத்தை வாக்குகள் மூலம் காட்டுங்கள் - விஜயகாந்த்
மதுரை: மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாத கட்சிகள் மீதான உங்களது கோபத்தை வாக்குகள் மூலம் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை தொகுதி தேமுதிக வேட்பாளர் கவியரசுவை ஆதரித்து நேற்று வண்டியூர், அய்யர் பங்களா, சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க., கடந்த 10 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவுடனும், தற்போது காங்கிரசுடனும் மத்திய அரசில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. அவர்கள் விவசாயிகளுக்காக என்ன செய்தார்கள்? முல்லை பெரியாறு அணையில் 10 அடி தண்ணீரை உயர்த்தினார்களா?
கடந்த முறை போல மீண்டும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்தால் நெல், கரும்புக்கு நல்ல விலை கிடைக்க வலியுறுத்துவேன் என்று கூறுகிறார் கருணாநிதி. ஏன் கடந்த 10 ஆண்டுகளில் அதனை செய்யவில்லை?
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தன்மானமுள்ள விவசாயிகள் மானம் போய் விடுமே என கருதி குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி விட்டனர். ஆனால் விவசாயிகள் என்று கூறி கடன் வாங்கிய தி.மு.க. வட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கடனை செலுத்தாமல் அரசு தள்ளுபடி செய்ததில் அதிக அளவு பயன் அடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த முட்டுக்கட்டை போட்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் தற்போது உங்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்டுகள் தானே ஆட்சி செய்கிறார்கள். இங்குள்ள கம்யூனிஸ்டுகள் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து இருக்கலாமே?
அதைப்போலவே உங்களிடம் ஓட்டு கேட்கும் பாரதீய ஜனதா கட்சியினர் அவர்களது ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் விடும்படி கூறி இருக்கலாமே?
நான் காசுக்கு ஆசைப்பட்டு இருந்தால் எப்படியோ இருந்திருப்பேன். கூட்டணி அமைத்திருப்பேன். இந்த விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைத்தேடி வந்துள்ளேன்.
திமுக தருவது பாவப் பணம்...
பிரசாரத்துக்கு விஜயகாந்த் வரப்போகிறான் என்று தெரிந்தவுடன் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் ஒரே நாளில் 26 கோடி ரூபாய் தந்துள்ளனர். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கினால் அவர்கள் செய்த பாவம் நம்மை சேரும். தலையை சுற்றி அந்த பணத்தை வீசி எறியுங்கள். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் காசு கொடுத்து கேட்கிறார்கள்.
பணம் கொடுப்பது தெரிந்தும் போலீசாரும், அதிகாரிகளும் அவர்களுக்கு கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். உடலுக்கு ரத்தம் எவ்வளவு முக்கியமோ அது போல் வாழ்க்கைக்கு மின்சாரம் முக்கியம். தற்போதைய மின்சார தட்டுப்பாட்டுக்கு மாறி மாறி ஆட்சி செய்த கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் காரணம்.
தொலை நோக்கு பார்வையில் மின்திட்டங்களை அப்போது செய்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது. கிராம மக்களுக்கு போதிய அளவு சுகாதார வசதி இல்லை. பாம்பு கடித்து ஆஸ்பத்திரிக்கு சென்றால் அங்கு நர்சு மட்டும் தான் இருக்கிறார். டாக்டர் இருப்பது இல்லை.
ஓட்டு மட்டும் போடுங்கள் என கூறும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் மேலூரில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை திறந்தார்களா? 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலை என்ன ஆனது?
மக்களிடையே தற்போது மவுன புரட்சி ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சியை மாற்றி அமைப்பார்கள். காட்சிகள் மாறும். முறையாக திட்டங்களை நிறைவேற்றாத அ.தி.மு.க., தி.மு.க.வினர் மீது ஆத்திரப்படாதீர்கள். அவர்கள் மீதான கோபத்தை ஓட்டு போடும்போது காட்டுங்கள்.
இலங்கை போரை நிறுத்த சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் உண்ணாவிரதத்தை நடத்துகிறார்கள். இலங்கை தமிழரை காப்பாற்ற ஐ.நா. சபைக்கு தந்தி கொடுத்தது தே.மு.தி.க. தான் என்றார் விஜயகாந்த்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications