மாணவியிடம் அத்துமீறல்-ஆசிரியர் கைது
சென்னை: திருவள்ளூர் அருகை பள்ளி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வரும் 20ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பழனிச்சாமி (30) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2007ல் அந்த பள்ளியில் படித்த 9ம் வகுப்பு மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பள்ளிகூடத்தில் தனிமைப்படுத்தி அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் காசி மற்றும் காஞ்சனா போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் புகாரை கண்டு கொள்ளவில்லை என்றும், அவர்கள் அதை அப்படியே விட்டுவிட்டனர் எனவும், பள்ளி நிர்வாகமும் அந்த ஆசிரியருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டப்டடது.
இதையடுத்து பொது மக்கள் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சுறுசுறுப்பாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் பழனிச்சாமியின் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து மாணவி சித்ராவும் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர்.
அவர் உடனடியாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிபதிகள் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி போலீசார், கல்வி துறைக்கு சிபாரிசு செய்துள்ளனர்.
கைதான ஆசிரியர் பழனிச்சாமிக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. அவருக்கு வரும் 20ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் அவர் கைது செயய்ப்பட்டுள்ளது, அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications