திருவாரூர் கலெக்டர்-மதுரை கமிஷனர் அதிரடி மாற்றம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சந்திரசேகரனின் செயல்பாடு சரியில்லாததால் அவரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து விட்டது.
திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த சந்திரசேகரன். இவரது செயல்பாடு தேர்தல் ஆணையத்திற்கு அதிருப்தி ஏற்படுத்தியது. செயல் திறமின்மை மிக்கவராக அவர் காணப்படுவதால் அவரை மாற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து சந்திரசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். அவருக்குப் பதில், மகளிர் மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குநர் உதயசந்திரன் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவராகியுள்ளார்.
மதுரை கமிஷனரும் மாற்றம்:
அதே போல மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலனை மாற்ற தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து நந்தபாலன் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
மதுரை தொகுதியில், சரமாரியாக வாக்காளர்களுக்குப் பணம் தரப்படுவதாகவும், ரவுடிகளை வைத்து எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாகவும் குவிந்த புகார்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நந்தபாலனை மாற்ற வேண்டும் என மதுரையில் மு.க.அழகிரியை எதிர்த்துப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஏகப்பட்ட புகார்கள் போயின.
இந்த நிலையில் நந்தபாலனை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று இரவே நந்தபாலன் மாற்றப்பட்டார். அவரை சென்னைக்கு அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உள்ள காவல்துறை அகாடமியின் ஐஜியாக நியமித்துள்ளனர்.
புதிய போலீஸ் கமிஷனராக தற்போது காவல்துறை அகாடமியின் ஐஜியாக உள்ள ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பணியில் சேருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications