8 தமிழக பெண் எஸ்பிக்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த எட்டு பேரும் மத்திய அரசுப் பணிகளுக்கும் செல்ல முடியும்.
ஐபிஎஸ் அந்தஸ்து பெற்றுள்ள பெண் அதிகாரிகள் ..
மாநில கொள்ளை தடுப்பு பிரிவு எஸ்.பி. செந்தில்குமாரி, சென்னை தலைமையிட துணை ஆணையர் ஆசியம்மாள், சென்னை கோட்டை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் மகேஸ்வரி, சிபிசிஐடி சூப்பிரண்ட் ராதிகா, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. லலிதாலட்சுமி, சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஜெயகவுரி, சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் விஜயகுமாரி, கோவை போக்குவரத்து துணை ஆணையர் காமினி.
மற்றும் விஐபி பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. துரைகுமாருக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications