தேர்தல்: மின்வெட்டுக்கு தடை- மக்கள் நிம்மதி
நெல்லை: தேர்தல் நேரம் நெருங்கியதை அடுத்து தமிழகத்தில் மின் வெட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் நேரத்தில் மின்வெட்டு நீக்கப்பட்டது மக்களுக்கு முழு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் நடக்கிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியினர் பிரசாரத்தில் இலவச கலர் டிவி, ரூ.1க்கு 1 கிலோ அரிசி, இலவச கியாஸ் இணைப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம், திருமணத்திற்கு ரூ.15 ஆயிரம், முதியோர் பென்சன் மாதம் ரூ.400, மதிய சத்துணவில் குழந்தைகளுக்கு வாரத்துக்கு 3 முட்டை என தங்களது சாதனைகளை அடுக்கி வருகின்றனர்.
ஆனால், இலங்கை தமிழர் பிரச்சினை காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சந்திக்கும் இரண்டாவது பெரிய பிரச்சினை மின் வெட்டு தான்.
கடந்த ஒரு ஆண்டாக மின்சாரம் எப்போது வரும், எப்போதும் போகும் என்றே தெரியாத நிலை இருந்தது. பின்னர் இது தினமும் 6 மணி நேரம், 3 மணி நேரம், அப்புறம் சிறிது நாட்களில் தலா 2 மணி நேரம் என குறைக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மின் வெட்டு இருக்காது. ஆளுங்கட்சி ஓட்டு வாங்கும் நோக்கில் முழுமையான மின்சாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அனைத்து இடங்களிலும் சுமார் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது.
இதன் காரணமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வருவாய் துறையினர், ஊழியர் கூட்டம் போடும் அரசியல் கட்சியினர், பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் மின்வெட்டு முழுமையாக நீங்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் 24 மணி நேரமும் மின் வினியோகத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால் எல்லாம் தாராளமாக கிடைக்க தொடங்கியுள்ளது. மின்வெட்டு ஓட்டு வங்கியை பாதித்துவிட கூடாது என்பதில் தற்போது ஆளுங்கட்சி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலை அதிக அளவில் மின்உற்பத்தி செய்வதால் மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு முழு சப்ளை செய்து வருகிறோம். ஆனால், எத்தனை நாட்களுக்கு காற்றுவீசும் என தெரியாது என்றார்.
எது எப்படியோ அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் மக்கள் மின்வெட்டு இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications