காங்கிரசுடன் கூட்டணியா?-ஜெயலலிதா பதில்
சென்னை: தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறாதது திமுகவுக்கு உதறலைத் தந்துல்ளது.
தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஜெயலலிதாவிடம் இடதுசாரிகள், நிதிஷ்குமார், நாயுடு, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார் என்றரீதியில் ராகுல் காந்தி பேசியுள்ளது குறித்து கருத்து கேட்டபோது பதிலளித்த ஜெயலலிதா,
ராகுல் காந்தி பேட்டி தொடர்பான செய்தியை நான் இன்னும் பார்க்கவில்லை. தற்போது எனது முழு கவனமும் தேர்தல் பிரசாரத்திலும், தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதிலும்தான் உள்ளது. தற்போதைய நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை என்றார்.
அதே நேரத்தில் காங்கிரசுடன் கைகோர்க்கத் தயார் இல்லை என்று ஜெயலலிதா கூறவில்லை. எதுவும் நடக்கலாம் என்றரீதியில் அவர் பதில் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலம் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,
இலங்கை தமிழர்கள் அவதி குறித்து தமிழக மக்கள் ஆழ்ந்த அனுதாபமும், கவலையும் கொண்டுள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவது குறித்து, இந்திய அரசு தேவையான நடவடிக்கையை முன்பே எடுத்து போர் நிறுத்தப்பட்டு இருந்தால் ஏராளமான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும் மக்கள் கருதுகிறார்கள். அத்துடன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு, நிர்ப்பந்தம் கொடுக்க முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தின்போது கிடைத்துள்ள அனுபவத்தை வைத்து சொல்கிறேன், மத்திய-மாநில அரசுகள் மீது மக்கள் மிகவும் கோபமாக இருப்பது எனக்குத் தெரிய வந்தது என்றார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications