மின் கோபுரத்தில் இடி-இருளில் மூழ்கிய தென்காசி
தென்காசி: தென்காசி பகுதியில் உள்ள மின்கோபுரத்தில் இடி விழுந்ததை அடுத்து நேற்று அங்கு சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. இதையடுத்து தென்காசி இருளில் மூழ்கியது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளி்ல் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென வானத்தி்ல் கருமேக கூட்டங்கள் உருவாகின. இதை தொடர்ந்து பலத்த இடி மற்றும் மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது.
அப்போது தென்காசி நகருக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் கொடிகுறி்ச்சி உயர் அழுத்த மின் பகிர்மான சேமிப்பு கிடங்கிலிருந்த உயர் அழுத்த மின்கோபுரத்தில் இடிதாக்கியது. இதையடுத்து உயர் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் நேற்று மாலை 5 மணி முதல் முதல் நள்ளிரவு 1 மணி வரை தென்காசி வட்டாரத்தில் 8 மணி நேரம் மின்வினியோகம் தடைப்பட்டது. நகர் முழுவதும் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
பின்னர் தடைப்பட்ட அந்த மின் கோபுரத்தை கயத்தாறு மின் வினியோக பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் உட்பட 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடும் போராட்டத்துக்கு பின் சரி செய்தனர். இதையடுத்து இரவு 1 மணிக்கு மின்வினியோகம் தொடர்ந்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications