'அமெரிக்க நிறுவனங்கள் பின்தங்கிவிடும்!' - பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்
டெல்லி: அவுட்சேர்ஸிங் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய கொள்கை பல்வேறு துறைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.
மருந்துப் பொருள் தயாரிப்புத் துறையில் பெரும் பின்னடைவுக்கு இந்தக் கொள்கை காரணமாகிவிடும் என ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்களே குறைகூறியுள்ளன.
இந் நிலையில், பிரைஸ்வாட்டார் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் ஒபாமாவின் அறிவிப்பை விமர்சித்துள்ளது. ஒபாமா சொல்வதை அமெரிக்க காங்கிரஸ் அமல்படுத்தினால், சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களின் போட்டித் தன்மை குறைந்துவிடும் அபாயம் உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவிலிருந்து வேலைக்கு ஆட்களை எடுக்கக் கூடாது என ஒபாமா அறிக்கை நேரடியாக வலியுறுத்துவதால், நிச்சயம் பெங்களூரு அல்லது சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டி வரும். கிட்டத்தட்ட 50 சதவிகித வருவாய் இழப்பை தாங்க எந்த நிறுவனமும் முன்வராது. ஆனால் அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பணியாளர் இல்லாமல், உற்பத்தி பாதிக்கப்பட்டால், அதன் இழப்பு, அமெரிக்க அரசு தரும் வரிச்சலுகையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதை வெள்ளை மாளிகை புரிந்து கொள்ள வேண்டும், என இந்த நிறுவனம் கூறியுள்ளது.
ராமலிங்க ராஜுவின் மோசடிகளால் பெரும் சிக்கலைச் சந்தித்த சத்யம் நிறுவன கணக்குகளை அதிகாரப் பூர்வமாக தணிக்கை செய்துவந்தது இந்த பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்தான். இதன் இரு முக்கிய அதிகாரிகள் இப்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications