எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த தடையில்லை-கோதபய

மிகக் குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அப்பாவி மக்கள் இருப்பதாக கூறப்படும் பகுதியில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த இலங்கை திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் கோதபய இப்படிக் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கோதபய கூறுகையில்,
போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களை குறைந்தபட்ச இழப்புக்களுடன் மீட்பதுதான் அரசின் நோக்கமாகும். நாடு, அரசு என்ற வகையில் எங்களுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது. பொதுமக்களைக் கொன்று இதனைச் செய்ய முடியாது.
இந்த விஷயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. இப்படிப்பட்ட தலையீடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே விடுதலைப் புலிகளும் தங்களுடைய இணையத் தளங்களில் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
போர் முனையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கான அனைத்தையும் நாம் செய்யும் அதே வேளையில் இந்தத் அந்நியத் தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் வழிவகைகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாகவே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை அதிபர் ராஜபக்சே வெளியிட்டார். இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் மண் அணைகள் மற்றும் பதுங்குகுழிகளைத் தகர்ப்பதற்கு படையினருக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
அதிபர் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச சமுதாயம் என பலர் உரத்துக் குரல் கொடுத்தாலும் ஒரே நம்பிக்கையுடன் செயற்பட்டதால்தான் எங்களால் இந்த அளவுக்கு வர முடிந்தது என்று கூறியுள்ளார் கோதபய.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications