புலிகளிடம் இன்னும் 2 விமானங்கள்- ராணுவம்

Subscribe to Oneindia Tamil

LTTE Plane
கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்து விமானங்களும் அழிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்களிடம் இன்னும் இரு விமானங்கள் உள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

அரசுப் படைகளிடம் சரணடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப் புலி வீரர்களும், பொதுமக்களும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத்துறை கூறுகிறது.

இரு விமானங்களில் ஒன்று ஹெலிகாப்டர் ஆகும். இந்த இரு விமானங்களும் பாதுகாப்பு வளையப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஹெலிகாப்டர் 90களின் ஆரம்பத்தில் வாங்கப்பட்டதாகும். மேற்கு முல்லைத்தீவில் உள்ள வட்டுவல் கோவில் விழாவின்போது இந்த ஹெலிகாப்டர் மலர் தூவிச் சென்றதாம். இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து வியந்தனராம்.

1998ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே ஹெலிகாப்டர் முள்ளியவலை பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவிச் சென்றதாம்.

மீண்டும் 2004ம் ஆண்டு விஸ்வமடு பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் இந்த ஹெலிகாப்டர் மலர் தூவிச் சென்றது.

விடுதலைப் புலிகள் வசம் முன்பு ஒரு ஹெலிகாப்டரும், நான்கு குட்டி விமானங்களும் இருந்தன. அதில் 2 விமானங்கள், கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலின்போது சேதமாகி விட்டன. தற்போது ஒரு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் புலிகளிடம் உள்ளது. ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும், விமானம் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை எனவும் பிடிபட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனராம்.

தற்போது புலிகள் வசம் உள்ள இரு விமானங்களும், புஷ்பநாதன் என்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வசம் உள்ளதாம்.

இன்னொரு முக்கிய தகவலும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு இரணமடு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய விமான தளத்துக்கு, சரகக்கு விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது. அதிலிருந்து மிகப் பெரிய பார்சல்கள் வந்தனவாம். அவை அனைத்தும் ராணுவபத் தளவாடங்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதில் என்ன இருந்தது என்பது குறித்த தகவல் ராணுவத்திற்குக் கிடைக்கவில்லை.

சமீபத்தில் விளாத்திகுளம் பகுதியில் ராணுவத்தின் ஆளில்லாத விமானம் ஒன்றை புலிகள் தாக்கி அழித்தனர். இதை தங்கள் வசம் உள்ள விமானத்தைப் பயன்படுத்தியே அவர்கள் அழித்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. அந்த விமானத்தில் பல்நோக்கு இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்டிருப்பதாகவும் ராணுவத்திற்குத் தெரிய வந்துள்ளது.

புலிகளின் விமானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் இரு விமானங்கள் இன்னும் அவர்களிடம் இருப்பதாக தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+