போட்டியிலிருந்து விலகுமாறு மாறன் தரப்பு கோரியது-ஹைதர் அலி

இதுகுறித்து அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தயாநிதி மாறனின் கூட்டாளிகள் சிலர் என்னை அணுகி இங்கு போட்டியிட வேண்டாம். தொகுதியை விட்டு மாறி விடுங்கள். அதற்குத் தேவையான பணத்தை நாங்கள் பெற்றுத் தந்து விடுகிறோம் என்று அவர்கள் கூறினர்.
மத்திய சென்னை தவிர வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அதற்கான செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அதை நான் நிராகரித்து விட்டேன்.
தயாநிதி மாறனால் மத்திய சென்னையில் வெற்றி பெற முடியாது. நாங்கள் மக்களோடு இணைந்து பழகக் கூடியவர்கள். ஆனால் மாறன் அப்படி அல்ல. சொந்தக் கட்சியினரிடம் கூட நெருங்கிப் பழகாதவர் மாறன். அப்படி இருக்கையில், எப்படி மக்களுடன் அவர் நெருக்கமாக இருக்க முடியும்.
தயாநிதி மாறன் கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற முக்கிய காரணமே தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரின் உழைப்புதான். எங்களது ஆதரவுடன்தான் கடந்த தேர்தலில் அவர் வென்றார்.
ஆனால் மத்திய சென்னை தேர்தல் முடிவு அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறது. திமுக தலைவர்களின் குடும்பப் பிரச்சினைகள் நாடு முழுவதும் தெரிந்து விட்டன. மக்கள் அவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொண்டு விட்டனர்.
தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பு திமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக கூறியுள்ளது. இதன் மூலம் திமுக, முஸ்லீம் வாக்களர்களை விட்டு மேலும் விலகி விட்டது.
மத்திய சென்னையி்ல் 30 சதவீத வாக்காளர்கள் முஸ்லீம்கள்தான். தெளஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தந்திருப்பதும் நல்லதுதான். இதன் மூலம் பெரும்பாலான முஸ்லீம்களின் வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்.
தற்போது மக்களின் மன நிலை திமுகவுக்கு எதிராக உள்ளது. அதேசமயம், முஸ்லீம்களைப் பொறுத்தவரை திமுக வேண்டாம் என நினைத்தால் அதிமுகவுக்குத்தான் அளிப்பார் என கருதத் தேவையில்லை. அந்த வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்.
தமிழக மக்கள் மதம் பார்த்து வாக்களிப்பதில்லை. தங்களுக்காக யார் உழைப்பார்களோ அவர்களுக்கே வாக்களிப்பார்கள் என்றார் ஹைதர் அலி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications