ஊழல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ், திமுக உறவு-பிரகாஷ் கரத்
கோவை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் வெளியேறிவிட்ட நிலையில், ஊழல் ஆதாயத்திற்காகத்தான் காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஒட்டிக் கொண்டிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் பிரசாரம் செய்தார். அப்போது பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜகவும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியும் காப்பி அடித்து விட்டதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதிலிருந்து இந்த இரு கட்சிகளும் பின்பற்றும் கொள்கைகள் ஒன்று தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
காங்கிரஸ் கட்சியோடு இருந்த கட்சிகள் எல்லாம் அதை விட்டு விலகி எதிர்த்துப் போட்டியிடுகின்றது. காங்கிரஸ் கட்சியோடு தற்போது ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதில் ஊழல் நடக்கவில்லை, சட்டப்படிதான் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் ப.சிதம்பரம் நற்சான்று வழங்கியுள்ளார்.
பிராந்தியக் கட்சிகளுக்கு தேசியக் கண்ணோட்டம் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தற்போது கூறுகிறார். இதுவரை பிராந்தியக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்துவிட்டு தற்போது அந்த கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.
இந்திய ஜனநாயகத்தில் மாநிலக் கட்சிகளோடு சேர்ந்து மாற்றுக் கொள்கை அடிப்படையிலான ஒரு அணியை உருவாக்குவோம். மக்களின் உண்மையான பிரச்சனைகள் பற்றி அக்கறை கொள்ளக்கூடிய ஒரு நாடாளுமன்றத்தையும், புதிய அரசையும் உருவாக்குவோம் என்றார் பிரகாஷ் கரத்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications