சென்னை தலைமைச் செயலகத்தில் தீவிபத்து - ஆபத்தில்லை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் இதில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்காமல் தப்பி விட்டன.
கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக பழைய கட்டடத்தின் 3வது மாடியில் பொதுத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏழே முக்கால் மணியளவில் திடீரென புகை வந்தது.
இதையடுத்து வாட்ச்மேன் ராமசாமி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
தலைமைச் செயலக வளாகத்திலேயே ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் தயார் நிலையில் இருப்பது வழக்கம். அந்த வண்டி வேகமாக விரைந்து வந்து தீயை அணைத்தது.
இந்த வண்டி தவிர மேலும் ஐந்து வண்டிகளும் வந்து தீயை அணைத்தன. அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை. சாதாரண எழுதுபொருட்கள் மட்டுமே கருகின.
மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications