ஒரு வழியாய்..,வருகிறார் சோனியா-கருணாநிதியுடன் பொதுக் கூட்டம்

வரும் திங்கள்கிழமையுடன் தமிழக தேர்தல் பிரசாரம் ஓயும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராகுலுக்கு திமுக எதிர்ப்பு...
முன்னதாக ராகுல் கருத்து குறித்து கருத்து தெரிவித்த திமுக, நாங்கள் சோனியாவின் பேச்சைத் தான் மதிப்போம். ராகுலின் பேச்சை அல்ல என காட்டமாகக் கூறியது. அத்தோடு கூட்டணி விஷயமாக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு குறித்து சோனியாவிடம் முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மீண்டும் சோனியாவும் கருணாநிதியும் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சோனியா காந்தி 10ம் தேதி மாலை சென்னை வருகிறார். வந்தவுடன் முதல்வரை மருத்துவமனையில் சந்திக்கிறார். பின்னர் அங்கிருந்து முதல்வரும், சோனியாவும், தீவுத் திடலுக்கு வருகிறார்கள்.
அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் டெல்லி கிளம்பிச் செல்கிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில் சோனியா புதுச்சேரிக்கு செல்வாரா, இல்லையா என்பது தெரியவில்லை.
இன்று சிவகங்கையில் ராகுல்....
சோனியாவின் புதல்வர் ராகுல் காந்தி இன்று சிவகங்கை, திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்லும் ராகுல், ப.சிதம்பரத்தை ஆதரித்துப் பேசுகிறார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று மாலையில் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமானை ஆதரித்துப் பேசுகிறார்.
இதே மேடையில் பெரம்பலூர் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன், கரூர் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகியோரையும் ஆதரித்துப் பேசுகிறார்.
ராகுல் காந்தி வருகையையொட்டி இரு ஊர்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்காக குண்டு துளைக்காத கார் டெல்லியிலிருந்து வந்துள்ளது. குண்டு துளைக்காத மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நாளையே முதல்வர் வீடு திரும்புவார்?:
இதற்கிடையே முதல்வர் கருணாநிதி காய்ச்சல் குறைந்து நலத்துடன் இருப்பதால் நாளையே அவர் வீடு திரும்பலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications