ஜெ. கைகாட்டுபவர் தான் அடுத்த பிரதமர்-அன்புமணி
மதுராந்தகம்: ஜெயலலிதா யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக வருவார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
மதுராந்தகத்தில் அவர் பேசுகையில்,
முன்பு சாராயம் தனியாரிடம் இருந்தது. கல்வி அரசிடம் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கல்வி தனியாரிடம் இருக்கிறது. சாராயம் அரசிடம் உள்ளது.
எங்களுக்கு இலவசம் என்று எதுவும் வேண்டாம். கல்வியை இலவசமாக கொடுங்கள். இலவச மின்சாரம் கொடுங்கள். வேலை வாய்ப்பு கொடுங்கள். இவை போதும். வேறு எந்த இலவசமும் வேண்டாம்.
ஒரு ரூபாய் அரிசியை கோழிக்கு போட்டால் அவை கூட சாப்பிடுவதில்லை என்று நாமக்கல்லில் கூறுகிறார்கள். விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை இல்லை. மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இல்லாத அரசுதான் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த தேர்தல் நியாயமாக, ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலை பற்றி ஐநா, அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகள் இலங்கையை கண்டிக்கின்றன. கவலைகொள்கின்றன. ஆனால் இந்தியா மட்டும் அமைதியாக மவுனம் சாதிப்பது ஏன்?
தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமராக வருவார். எனவே ராமகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அன்புமணி ராமதாஸ்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications