வளர்ச்சித் திட்டங்கள் தெரியவில்லை - ஈழப் பிரச்சினையைப் பேசி திசை திருப்புகிறார் ஜெ!
சென்னை: எதிர்கட்சித் தலைவருக்கு தமிழகத்தில் இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் தெரியவில்லை, ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசி திசை திருப்புகிறார், என தீவுத்திடல் பிரச்சாரக் கூட்டத்தில் சாடினார் முதல்வர் கருணாநிதி.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடன் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் செய்த கருணாநிதி பேசியதாவது:
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறி, வடக்கு வளர்கிறது; தெற்கு தேறுகிறது என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.
தமிழகத்தின் சாலை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு சோனியா அனுமதி அளித்துள்ளார்.
இத்தனை திட்டங்களை அறிவித்துள்ள போதும் இங்குள்ள சிலர், ஈழப் பிரச்னையைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டபோது நான் எழுதிய கவிதையைக் காரணம் காட்டி தி.மு.க., அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய எதிர் கட்சித் தலைவர் இன்று தனி ஈழம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
சோனியாவும் பிரதமரும் ஈழப் பிரச்னை குறித்துhd பேசவில்லை என்று எதிர் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் பேசிய ராகுல் வரிக்கு வரி ஈழத் தமிழர்கள் உட்பட வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பற்றியே பேசி உள்ளார். நேற்று சென்னை வந்த பிரதமரும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications