பண்பில்லாமல் பேசுவோருக்கு அழிவு ஆரம்பம்-அழகிரி
மதுரை: தமிழக முதல்வர் கருணாநிதியை எந்த அளவுக்கு பண்பில்லாமல் பேச முடியுமோ அந்த அளவுக்கு சிலர் பேசுகின்றனர். இது அவர்களது அழிவு காலத்தின் முதல்படி என்று திமுக தென் மண்டல அமைபுபச் செயலாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நெல்பேட்டை, கீழவெளி வீதி, முனிச்சாலை, இஸ்மாயில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அழகிரி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மாநிலத்தில் திமுக அரசு, மத்தியில் காங்கிரஸ் அரசுகளின் சாதனைகள் மக்களை போய் சேர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகளோ எங்களை விமர்சித்து பிரசாரம் செய்கின்றன.
குறிப்பாக முதல்வர் கருணாநிதியை எந்த அளவுக்கு பண்பில்லாமல் பேச முடியுமோ அந்த அளவு பேசுகின்றனர். இது நீண்ட நாள் நீடிக்காது. இது அவர்களது அழிவு காலத்தின் முதல் படி. திமுக மற்றும் அதன் கூட்டணி்க்கு தென் மாவட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
அழகர் ஆற்றில் இறங்கும்போது என்னால் வன்முறை ஏற்படும் என்று ஜெயலலிதா பேசினார். ஆனால் திருவிழா அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இது போன்ற பொய் புகார்களை அவர்கள் கூறுவது குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும். நான் ஏற்கனவே கூறியபடி சுமார் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications