தேர்தல் அலுவலருடன் ரகளை-அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
ராமநாதபுரம்: தேர்தல் அலுவலரிடம் வீடியோ கேசட்டை பறித்து, ரகளையில் ஈடுபட்ட ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி, ராமநாதபுரம், சக்கரகோட்டை ஊராட்சி பள்ளிவாசல் அருகே பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் அலுவலரான திருவாடானை துணை தாசில்தார் கதிரேசன் அப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கொடி, தோரணங்கள் குறித்து கேமராமேனுடன் சென்று வீடியோ எடுத்தார்.
இதை பார்த்த அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி ஆவேசம் அடைந்து கேமராமேனிடம் இருந்த வீடியோ கேமராவை திடீரென பறித்தார். இதனால் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்திக்கும், தேர்தல் அலுவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கேசட்டை பறித்துக் கொண்டு கேமராவை திருப்பி கொடுத்தார்.
இதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications