அவதூறு பேச்சு-அதிமுக கூட்டணியினர் 6 பேர் வழக்கு
சிவகிரி: சிவகிரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி அவதுறாக பேசியதாக போலீசார் அதிமுக கூட்டணியை சேர்ந்த 6 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியில் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடந்தது.
அப்போது முதல்வர் கருணாநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி அதிமுக கூட்டணி கட்சியினர் அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து நகர அதிமுக செயலாளர் மகாலிங்கம், இநதிய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் தங்கவேல், மற்றும் அதிமுகவை சேர்ந்த குருநாதன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் குருசாமி, முத்துசாமி, வெள்ளானை ஆகிய 6 பேர் மீது சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவதூறாக பேசியதை தட்டி கேட்டு தகராறு செய்ததாக திமுகவை சேர்ந்த துரைராஜ், ஆட்டோ டிரைவர் சுஜே, புல்லட் ராஜா மகன் குமார், கணேசன் ஆகியோர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் பாண்டி விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications