பாஜகவுக்கு ஆதரவு உண்டாம் கூட்டணி இல்லையாம்!
ஹைதராபாத்: தனி தெலுங்கானா அமைத்து கொடுப்போம் என பாஜக கூறியுள்ளதால் மத்தியில் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டோம் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளது.
இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணியில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி இணைந்தது. ஆனால், அந்த மாநிலத்தில் தேர்தல் முடிந்தவுடன் இந்தக் கட்சி பாஜகவுடன் கைகோர்த்துள்ளது.
பஞ்சாபில் நடந்த பாஜக கூட்டணி மாநாட்டில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி பங்கேற்றது. இதன்மூலம் மூன்றாவது அணியில் பிளவு ஏற்பட்டுவிட்டது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் நரசிம்ம ரெட்டி ஆகியோர் இது குறித்து ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சந்திரபாபு நாயுடு தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். நாயுடு மற்றும் கம்யூனிஸ்ட் உடனான கூட்டணி மாநில அளவில் மட்டும் தான். இடதுசாரி கட்சிகளும் இந்த கூட்டணி தேர்தல் வரை மட்டும் தான் எனக் கூறியுள்ளன.
மத்தியில் யாரை ஆதரிக்க வேண்டும் என எங்கள் கூட்டணிக்குள் எந்த கட்டுப்பாடும் கிடையாது. தனி தெலுங்கான அமைக்க ஆதரவு கொடுக்கும் எந்த கட்சிக்கும் நாங்கள் மத்தியில் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறேம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஆதரவு கொடுப்போம். ஆனால், அவர்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் சேரமாட்டோம். எங்களது இந்த முடிவை பெரும்பாலான தெலூங்கானா மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றனர்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்காவது புரிந்தால் சரி!.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications