Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 47 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Tamils in Vanni
முல்லைத்தீவு: முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனையை குறி வைத்து இலங்கை ராணுவம் மீண்டும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 47 பேர் உயிரிழந்தனர்.

முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று காலை 8 மணிக்கு இலங்கை ராணுவம் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஜூனியர் பள்ளி வளாகத்தில் இந்த தற்காலிக மருத்துவமனை இயங்கி வருகிறது. இன்று காலை நடந்த தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 55 நோயாளிகள் படுகாயமடைந்ததாக மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியான தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

மே 2ம் தேதி இங்கு கொலை வெறித்தனமாக எறிகணைகளை வீசி இலங்கை நடத்திய தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் மீண்டும் இந்த மருத்துவமனையை குறி வைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது

இந்த மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேறு மருத்துவனைக்கு செல்வதற்காக செஞ்சிலுவைச் சங்க கப்பலுக்காக இவர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் அடுத்தடுத்து இங்கு இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+