துன்பத்தை இலவசமாக கொடுத்த திமுக-ஜெயராமன்
பொள்ளாச்சி: திமுகவினருக்கு இலவச பொருட்களை வழங்கிய திமுக அரசு, மக்கள் கேட்காமலே அவர்களுக்கு துன்பத்தை இலவசமாக கொடுத்துள்ளது என அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்துப் அக்கட்சியின் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
திமுக அரசு மக்களுக்கு இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு ஆகியவற்றைத் தருவதாக அறிவித்தது. அது இன்று வரை பலருக்கும் கிடைத்தபாடு இல்லை. அந்த பலனை அனுபவித்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் தான்.
தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி சிலருக்குப் பொருள்களை இலவசமாக வழங்கிய திமுக அரசு, பொதுமக்கள் யாரும் கேட்காமலேயே அவர்கள் அனைவருக்கும் துன்பத்தையும் இலவசமாக வழங்கிவிட்டது.
மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில்வே பகுதிகளைத் தமிழக அரசு யாரிடமும் தெரிவிக்காமல் பாலக்காடு கோட்டத்துக்குத் தாரை வார்த்துவிட்டது. இது மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்.
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை மீண்டும் சேலம் அல்லது மதுரை கோட்டத்துக்குக் கொண்டு வர அதிமுக முயற்சி செய்யும் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications