6 கோடி ரூபாய் ரூ. 100 நோட்டுக்களாக மாற்றம் - விசாரணை கோரும் சிபிஎம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
விருதுநகரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை மூலம் ரூ.6 கோடிக்கான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மே 5, 7, 9 தேதிகளில் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
மாநில அமைச்சர் ஒருவரது மேலாளரும், அவரை சார்ந்தவர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கியின் வழக்கமான பணி நேரத்தை மீறியும் இந்த நோட்டுகள் எண்ணி ஒப்படைக்கும் பணி நடந்துள்ளது. தேர்தல் காலத்தில் தேர்தல் மோசடிகளுக்காகவே நடைபெற்றுள்ள இந்த செயல்களுக்கு பொதுத்துறை வங்கியை பயன்படுத்தியுள்ளனர்.
முற்றிலும் முறைகேடாக நடந்துள்ள இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி உண்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். வங்கியிலுள்ள ரகசிய கேமிரா மூலமும், வங்கியின் பாதுகாப்பு அறையின் இருப்பு பற்றிய ஆவணங்களை சோதித்தும் இதுபற்றிய விவரங்களை அறிய இயலும்.
யாருடைய பணம், யார் மூலமாக, யாருக்காக எதற்காக இவ்வாறு மாற்றப்பட்டது என்ற விவரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். இதுபற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.
மாநிலத்தின் பல பகுதிகளில் தேர்தல் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு, பண விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் நிகழ்வு பற்றி காலதாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications