தொகுதி நீக்கத்தால் அதிருப்தி-'49 O' வை பயன்படுத்திய புதுக்கோட்டை வாக்காளர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டதைக் கண்டித்து அத்தொகுதி வாக்காளர்கள் பலரும், வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் '49 O' படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் படிவத்தைக் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தொகுதி இந்த முறை நீக்கப்பட்டு விட்டது. அதில் இடம் பெற்றிருந்த தொகுதிகளை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை தொகுதியில் சேர்த்து விட்டனர்.
இதை எதிர்த்து புதுக்கோட்டையில் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருப்பினும் பலன் இல்லை. இதையடுத்து வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் '49 O' படிவத்தை இன்று காலை முதல் வாக்காளர்கள் கொடுத்து வருகின்றனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டுப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இப்படிவத்தைக் கொடுத்ததால் தேர்தல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் புறக்கணிப்பு..
இதேபோல கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தவளைப்பட்டி என்ற கிராமத்தில் அடிப்பட வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து அங்குள்ள 633 வாக்காளர்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications