போரை நிறுத்த இலங்கையிடம் யுஎஸ்-யுகே கண்டிப்பு
வாஷிங்டன்: இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். போர் பாதித்த பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மனிதாபிமான உதவிக் குழுக்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து இலங்கை மக்ளுக்கும் பொதுவான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கும், பிற சிறுபான்மையினருக்கும், தேசிய அரசியல் நீரோட்டத்தில் சம உரிமையும், சம அந்தஸ்தும் அளிக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அப்பாவி மக்களை விடுவிக்க முன்வர வேண்டும். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27ம் தேதி அளித்த உறுதிமொழியை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
ஐ.நா. மனிதாபிமான குழுக்களை போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போர்ப் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும் தேவையான உணவு, மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications