பிரசாரத்தின்போது இடையூறு - இல.கணேசன் மீது டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது தனக்கு இடையூறு செய்ததாக பாஜக தலைவர் இல.கணேசன் மீது சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்குமாறு கணேசனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் போட்டியிட்டார். அதேபோல சுயேச்சையாக இதே தொகுதியில் போட்டியிட்டார் பிரபல சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், நான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது, பாஜக தலைவர் இல.கணேசன் தூண்டுதலின் பேரில், அவரது கட்சியினர் என்னையும், என்னுடன் வந்த ஆதரவாளர்களையும் தாக்கினர்.
என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்த அவர்கள் மீது நான் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
எனவே என்னைத் தாக்கி பிரசாரத்தை தடுத்த இல.கணேசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் என்னைத் தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனு நீதிபதி ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தபோது தன் சார்பில் ராமசாமியே ஆஜராகி வாதாடினார். கணேசன் சார்பில் ரபு மனோகர் ஆஜராகி, இது விசாரணைக்குரிய வழக்கே அல்ல என்று வாதாடினார்.
வாதத்திற்குப் பின்னர் இல.கணேசன் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications