வன்னியில் போர் உக்கிரம் - கொழும்பு விரைந்தார் விஜய் நம்பியார்
நியூயார்க்: இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான அவலத்தைத் தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார். அவர் கொழும்புக்கு விரைகிறார்.
இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கை க்கு உதவுவதற்காக தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளார்.
அதிபர் ராஜபக்சேவுடனும் பான் கி மூன் தொலைபேசியில் பேசி அதிகரித்து வரும் மக்கள் பேரவலம் குறித்து கவலை தெரிவித்தார் என்றார்.
இதையடுத்து இன்றே கொழும்பு விரைகிறார் விஜய் நம்பியார். தமிழர் பகுதிகளில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக விவாதம் நடத்தியதற்கு அடுத்த நாளே தனது சிறப்புத் தூதரை அனுப்ப பான் கி மூன் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்புதான் விஜய் நம்பியார் கொழும்பு சென்று திரும்பினார். அங்கு தான் கண்டது, கேட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அவர் விளக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications