For Daily Alerts
Just In
திமுகவிடமிருந்து தென் சென்னையை கைப்பற்றியது அதிமுக
சென்னை: தென் சென்னை தொகுதியில், வெற்றி பெற்று அத்தொகுதியை திமுகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது அதிமுக.
கடந்த லோக்சபாவில் டி.ஆர்.பாலுவை எம்.பியாக கொண்டிருந்த தென் சென்னை தொகுதியில் இம்முறை திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், அதிமுக சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரனும் மோதினர். பாஜகவின் இல.கணேசனும் களத்தில் இருந்தார்.
இந்த முக்கோணப் போட்டியில், சிறிய இழுபறிக்குப் பின்னர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
32 ஆயிரத்து 446 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இங்கு வென்று, திமுகவிடமிருந்து தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.
Comments
தமிழ்நாடு win வெற்றி tamilnadu election 2009 தேர்தல் 2009 south chennai தென் சென்னை election results தேர்தல் முடிவுகள் சிட்லபாக்கம் ராஜேந்திரன்
Story first published: Saturday, May 16, 2009, 16:12 [IST]