பெரும் வாக்கு வித்தியாசத்தில் மு.க.அழகிரி வெற்றி
மதுரை: மதுரை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் மு.க.அழகிரி 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணியிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளவர் அழகிரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய எம்.பியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.மோகனை 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் அழகிரி.
இந்தத் தொகுதியை சிபிஎம்மிடிருந்து கைப்பற்றியுள்ளது திமுக. மேலும் மதுரையில் திமுகவுக்கு கிடைக்கும் முதல் வெற்றியும் இதுவே ஆகும்.
முதல் முறையாக தேர்தல் களத்தை வேட்பாளராக சந்தித்த மு.க.அழகிரி லட்சத்திற்கும அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
அழகிரியின் வெற்றியை மதுரை முழுவதும், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.
மொத்த வாக்குகள்: 10,21,055
பதிவானவை: 7,91,679
அழகிரி(திமுக) - 4,31,295
மோகன்(சிபிஎம்) - 2,90,310
கவியரசு(தேமுதிக) - 54,419












Click it and Unblock the Notifications